அஞ்சாநெஞ்சன்

படைத்தவனை அஞ்சுவோம்! படைக்கப்பட்டவைகளுக்கல்ல!!

Monday, November 06, 2006

பிரார்த்தனை - தோற்றுவாய்

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்.'' - நபிகள் நாயகம் (ஸல்)
நூல்கள்: புகாரி, முஸ்லி்­ம்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
தீர்ப்பு நாளின் அதிபதி.
(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.